Recent Posts

Search This Blog

இலங்கைக்கு கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட இருந்த சுமார் 60 இலட்சம் ரூபா மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Friday, 29 December 2023


இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மரைன் பொலிஸார் புதுமடம் கடற்கரைப் பகுதிக்கு விரைந்து சென்று, ரோந்து பணியில் ஈடுபட்ட போது,

சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சோப்பு, எண்ணெய், வாசனை திரவியம் உள்ளிட்ட இந்திய பெறுமதியில் 16 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ( இலங்கை மதிப்பில் சுமார் 60 இலட்சம்) மதிப்பிலான பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த வாகனத்தை நிறுத்தி வைக்கப்படுகிறது தெரியவந்தது.

இதையடுத்து பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment