Recent Posts

Search This Blog

தங்களை Ban பண்ணுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையே icc யிடம் கோரிக்கை விடுத்தது.

Friday, 10 November 2023


ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்த சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் (ஐசிசி) ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் (10) கோரிக்கை விடுத்ததாக பிரபல cricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது.



இலங்கை கிரிக்கெட் பிரதிநிதிகளை பார்வையாளராக பங்கேற்க ஐசிசி அனுமதித்துள்ளதால், அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி கூட்டங்களில் ஷம்மி சில்வாடா பங்கேற்க வாய்ப்புள்ளதாக அந்த இணையதளம் கூறுகிறது.



தற்போது இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக ஐ.சி.சி.யால் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.



இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் பொறுப்புகளை, குறிப்பாக அதன் விவகாரங்களை சுயாதீனமாக நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும், நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடுமையாக மீறியுள்ளது. இருப்பினும், இடைநீக்கத்தின் நிபந்தனைகள் எதிர்காலத்தில் ஐசிசியால் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment