சத்துரிக்கா சிறிசேனவுக்கு சொந்தமான பத்தரமுல்லை - விக்ரமசிங்கபுர பகுதியில் உள்ள வீட்டில் பணம் மற்றும் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சுமார் 29 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அலுமாரியில் இருந்த பணம், தங்க ஆபரணங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment