களுத்துறை - களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வெளியில் நீராடச் சென்ற போதேஇந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
நேற்று பிற்பகல் களுத்துறை கல்லூரிக்கு முன்பாக உள்ள களுகங்கை ஆற்றில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை பன்வில பிரதேசத்தில் வசிக்கும் இவாங்கி மதுஹாஷினி,
தொடங்கொட நவிலியாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் கவிந்து சத்சர மற்றும்
தொடங்கொட ரதுகுருசாவில் வசிக்கும் சுபானி சுபேஷலா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவர்களும் இவ்வருடம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தமையும் தெரியவந்துள்ளது.
இன்று மாணவர் ஒருவரின் தாயாரின் பிறந்தநாள், அதற்காக அவர்கள் கடற்கரைக்கு வந்திருந்தனர்.
முதலில் கடலில் நீந்திக் கொண்டிருந்த அவர்கள் மாணவர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கலுகங்கைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், மீட்கப்பட்டு அம்புலன்ஸ் வாகனத்தில் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment