Recent Posts

Search This Blog

118 க்கு வந்த அநாமதேய அழைப்பும், 72 பள்ளிவாசல்களுக்கு கடும் பாதுகாப்பும்.

Wednesday, 19 April 2023


கண்டி, அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட பள்ளிவாசல்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படுமென, பொலிஸ் அவசர பிரிவுக்குக் கிடைத்த அநாமதேய தகவலை அடுத்து, அப்பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டிருக்கும் சகல பள்ளிவாசல்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


இந்த அநாமதேய அழைப்பு, செவ்வாய்க்கிழமை
(18) பிற்பகல் 2.45க்கு 118 என்ற பொலிஸ் அவசர
இலக்கத்துக்கே கிடைத்துள்ளது.


இதனையடுத்து மத்திய மாகாண உயர்பொலிஸ்
அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு,
அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த
நடவடிக்கைகளை எடுத்தனர்.


இதனடிப்படையில் அப்பொலிஸ் பிரிவு உட்பட
72 பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


பொலிஸ் குழு மற்றும் இராணுவ குழு
கடமைக்கு அழைக்கப்பட்டு, பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


எனினும், அவ்வாறான தகவல்கள் எவையும்
தங்களுக்கு கிடைக்கவில்லை என புலனாய்வு
தரப்பினர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment