பன்னிப்பிட்டிய நியடகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் 15 கிலோகிராம் நிறையுடைய அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவற்றின் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகம் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீகொட (31) வயதுடையவர் என்பதுடன், அவரும் அம்பர் கையிருப்பும் மேலதிக விசாரணைகளுக்காக ஹோமாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அம்பர்கிரிஸ் (Ambergris) என்றால் என்ன?
திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris), திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும்.
திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும்.
இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர்கிரிஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அம்பர் கிரிசை சிலசமயம் திமிங்கிலங்கள், வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. சில திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.
No comments:
Post a Comment