Recent Posts

Search This Blog

ராஜபக்‌ஷக்களைப் புறந்தள்ளி எடுக்கும் தீர்வுகள் நிரந்தரமாகாது

Thursday, 20 April 2023


ராஜபக்‌ஷக்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்தத் தீர்வுகளும் எந்தச் சமூகங்களுக்கும் நிரந்தரமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் விஜேராம இல்லத்தில் (19) இடம்பெற்ற இப்தாரில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், சமய பெரியார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,


முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. இவ்வாறு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட சில முயற்சிகள் தற்காலிகமாத்தான் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறன.பின்னர்,இதற் குப்பின்னாலிருந்த சக்திகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுவிடுவர்.கடந்த காலகங்களிலும் இவ்வாறுதான் நிகழ்ந்தன.இலங்கை அரசியலில் ராஜபக்‌ஷக்கள் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கின்றனர்.இதனால்,இவர்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த அரசயல் தீர்வுகளும் நிரந்தரமாக இருக்காது.



நாட்டின் ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்க்ஷ, இளம் வயதிலிருந்தே பலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்.ஒடுக்கப்படும் மக்களுக்காக குரலெழுப்பும் மஹிந்த ராஜபக்‌ஷவை, மிதவாதமாகச் சிந்திக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நன்கு புரிந்துவைத்துள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.


ஏ.ஜீ.எம்.தௌபீக்



No comments:

Post a Comment