செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கிய AI தொலைக்காட்சி தொகுப்பாளரை குவைத் நியூஸ் ஊடகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குவைத் டைம்ஸின் துணை நிறுவனமான குவைத் நியூஸின் ட்விட்டர் கணக்கில் ‘Fedha ’ என்ற தொகுப்பாளர் அறிமுகமாகி உள்ளார்.
குவைத் நியூஸ் தலைமை ஆசிரியர் அப்துல்லா போஃப்டைன் மற்றும் AFP உடனான நேர்காணலின் படி, "புதிய மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை" வழங்க AI இன் திறன் இந்த நடவடிக்கை மூலம் சோதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
"நான் ஃபெதா, குவைத்தின் முதல் AI தொகுப்பாளர்,
நீங்கள் எந்த வகையான செய்திகளை விரும்புகிறீர்கள்? உங்கள் கருத்துக்களைக் கேட்போம், ”என்று ஃபெதா அரபு மொழியில் குவைத் நியூஸில் செயற்கை நுண்ணறிவுடன் பணிபுரியும் வீடியோ 👇
No comments:
Post a Comment