Recent Posts

Search This Blog

சட்டவிரோதமாக செயற்படுபவர்களை பொலிஸார் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள்.

Sunday, 31 July 2022


அரச கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அத்துமீறி அரச கட்டடங்களுக்குள் பிரவேசிப்பதற்கோ எவருக்கும் அனுமதி கிடையாது. அவ்வாறு செயற்டுவது சட்டவிரோதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செயல்படுபவர்களை பொலிஸார் வெறுமனே கைகட்டி நின்று பார்க்க மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


No comments:

Post a Comment