கந்தளாய் யூசுப்
கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதால்
பல ஏக்கர் வேளான்மை பயிர்ச்செய்கை பாதிக்கபட்டுள்ளது .
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்தமையால் பத்து வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கந்தளாய், வான் எல, தம்பலகாமம் ,ஆயிலியடி, நாலாம் வாய்க்கால் போன்ற தாழ்நிலப் பகுதிகளில் உள்ள வெல்ல நீரினால் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள வேளாண்மை செய்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பல கஷ்ட்டத்திற்கு மத்தியில் நாங்கள் விவசாயத்தை மேற்கொண்டு வந்தோம் அறுவடைக்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் இப்பாதிப்பு இடம் பெற்றுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் தமக்கு நட்டஈடுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment