Recent Posts

Search This Blog

அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து இலங்கைக்கு பெருமை சேர்க்கும் அக்கரைப்பற்று மாணவி.. பாடசாலையின் தூதுவராகவும் தெரிவு.

Thursday, 18 January 2024


அஷ்ரப் ஏ சமத்
அக்கரைப்பற்று பாத்திமா பேகம் ஜலீல் அமெரிக்காவில் Westfield middle school 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார்


இம்மாணவி கல்வியிலும் இதர செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கியதால் அமெரிக்காவில் 300 பாடசாலை மாணவிகள் ஒன்றிணையும் சமூக மேம்பாட்டு ஒன்றிய ஒன்று கூடலுக்கு
பாத்திமா பேகம் ஜலீல் Westfield middle school சார்பில் தூதுவராக (Ambassador ) ஆக தெரிவு செய்யப்பட்டு இருப்பது விசேட அம்சமாகும்.


இவர் தனது மார்க்க அடையாளத்தை கைவிடாது பாடசாலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு தன்னை தூதுவராக (Ambassador) அடையாளப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.


அமெரிக்காவில் பல நாட்டு மாணவர்களுக்கு மத்தியில் பாத்திமா ஜலீல் தூதுவராக (Ambassador) தெரிவு செய்யப்படிருப்பது இவரின் திறமைக்கு ஒரு சான்று தனது தந்தையின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் வழிகாட்டலும் தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததாக பாத்திமா ஜலீல் கூறுகிறார்.


இவர் அக்கரைப்பற்று ஜலீல், நுஸ்ரத் பேகம் தம்பதிகளின் புதல்வி என்பது குறிபிடத்தக்கது


No comments:

Post a Comment