யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞன் ஒருவன் பலியாகியுள்ளான். மற்றுமோர் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அராலி வீதி, கலுண்டை சந்தி, மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அப்பாச்சி மோட்டார் சைக்கிளும்,
யாழ்ப்பாணத்திலிருந்து அராலி நோக்கிப் பயணித்த பல்ஸர் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
அராலி மத்தி வட்டுக்கோட்டை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) என்பவரும், மற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த மகேஸ்வரன் மயுரன் (வயது 37) என்பவரும் விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரன் மயுரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
No comments:
Post a Comment