
தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பொருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு துன்ப, துயரங்கள் அகன்று மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துவதாக, சுற்றாடல் அமைச்சர், பொறியியலாளர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்தாவது, "ஹஜ் கடமையானது நபி இப்றாஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா (அலை) ஆகியோரின் தியாக வரலாற்றை உணர்த்தி நிற்கின்றது.
அதேநேரம், உலகெங்கும் வாழும் முஸ்லிம்களில் சுமார் 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், உலகின் நாலாபுறங்களிலிருந்தும் மக்காவுக்கு வந்து ஹஜ்ஜை நிறைவேற்றி ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிக்காட்டுவதும் எமக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாக அமைகிறது.
எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஏனைய சக சமூகங்களுடன் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்த்து, ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கும் இங்கு வாழும் முஸ்லிம்கள் அரசியல், பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒரே குடும்பத்தினராக அணிதிரண்டு இந்நாட்டின் சுபீட்சத்துக்குமாக இந்நன்நாளில் இறைவனை பிரார்த்திப்போம்" என்றார்.
No comments:
Post a Comment