Recent Posts

Search This Blog

35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் முட்டை தயாராகி வருகிறது ; முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு

Wednesday, 28 December 2022


அடுத்த சித்திரை புத்தாண்டின் போது முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்கு தயாராகி வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க, முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்கவும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சில வெதுப்பக உரிமையாளர்கள் முட்டை விலையினை காரணம் காட்டி, வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரித்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

தற்போது, முட்டை கோழிகளின் பெருக்கங்கள் அதிகரித்துள்ளன.

எனவே, எதிர்காலத்தில் முட்டை விலையினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது


No comments:

Post a Comment