Recent Posts

Search This Blog

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க பிரஜை கைது.

Wednesday, 28 December 2022


இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்க பயணி ஒருவர் நேற்று (28) இரவு விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக 10 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபரான அமெரிக்க பிரைஜை, பெண்ணொருவருடன் நேற்றிரவு 8.25 மணிக்கு சென்னை செல்ல விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள ஸ்கிரீனிங் இயந்திரம் வழியாகச் சென்றபோது, ​​குறித்த நபரிடம் மேற்படி வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அவர் விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்திற்குரிய பயணி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் வந்த பெண்ணை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


No comments:

Post a Comment