Recent Posts

Search This Blog

வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்... மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை #இலங்கை

Saturday, 22 April 2023


வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்... மூன்று
 பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை #இலங்கை 

நிதர்ஷன் வினோத்

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீது இனந்தெரியாதோர் நடத்திய வாள்வெட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என்று ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை (22) அதிகாலை இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment