Recent Posts

Search This Blog

கொழும்பு, கல்முனை, மாளிகைக்காடு, மருதமுனை, கிண்ணியா, பரகஹதெனிய, உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை .

Saturday, 22 April 2023

 கொழும்பில், முஸ்லிம் இடதுசாரி முன்னனி - MLF நடத்திய நோன்புப் பெருநாள் திடல் தொழுகை - 22.04.2023





கல்முனை ஹுதா திடலில் நடைபெற்ற நோன்புப்பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும். நிகழ்த்தியவர் மெளலவி எஸ்.எல். எம்.நிக்றாஸ் (தவ்ஹீதி) ( படம் - நூருல் ஹுதா உமர்)






 மாளிகைக்காடு, சாய்ந்தமருதில் மகிழ்ச்சியாக அதிகாலையில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை !

நூருல் ஹுதா உமர்

தியாகத்தை போதிக்கும் புனித நோன்புப்பெருநாளை நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் இன்று கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் நிகழ்த்தினார்.


சாய்ந்தமருது அல்- அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அல்- அக்ஸா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஆர்.எம். றியாஸ் (பஹ்மி) நிகழ்த்தினார்.


சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது அப்பிள் தோட்ட திடலில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர் மௌலவி ஏ. ஹலீலுர்ரஹ்மான் (ஸலபி) நிகழ்த்தினார்.


இன்று முஸ்லிங்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் தொழுகையில் ஈடுபட்டிருந்ததுடன், தொழுகை முடிந்தவுடன் தமது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். மட்டுமின்றி காலமான தமது உறவுகளுக்காக ஜனாஸா மையவாடிகளில் துஆ பிராத்தனையில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.













மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதி   நோன்பு  பெருநாள் தொழுகை  

பாறுக் ஷிஹான்

புனித  ஈதுல் பித்ர்  நோன்புப்  பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்   அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (22)  காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது   அஷ்செய்க்  ஏ.ஆர் நுவீஸ் (மக்கி)  தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும்  பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

 மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித   பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது  பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .

இதனை தொடர்ந்து  தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள்  நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .





















No comments:

Post a Comment