நாமல் ராஜபக்சவின்
தருண்யட்ட ஹெடக் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட போது 2014 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையிடமிருந்து பெறப்பட்ட மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு (ஜெனரேட்டர்கள்) 1,122,889 ரூபா பாக்கி இன்னும் செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபைகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
380KVA இன் 2 ஜெனரேட்டர்கள்,
350KVA இன் 1 ஜெனரேட்டர்,
300KVA இன் 2 ஜெனரேட்டர்கள்
மற்றும் 250KVA இன் 2 ஜெனரேட்டர்கள் வாடகை அடிப்படையில் மின்சார சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த பொசன் வலயத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
29.05.2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பொசன் வலயம் தொடர்பாக 15 22,889 ரூபாய் (பதினைந்து இலட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்தி ஒன்பது ரூபாய் ) வாடகை செலுத்த வேண்டிய நிலையில்
4 இலட்சம் ரூபாவை Youth Tomorrow foundation , இலங்கை மின்சார சபைக்கு முற்பணமாக செலுத்தியுள்ளது.
மார்ச் 25, 2019 அன்று, யூத் டுமாரோ அமைப்பிற்கு எஞ்சிய நிலுவைத் தொகையான 1,122,889 ரூபாயை செலுத்துமாறு CEB தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின் உற்பத்தி இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்காக மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 1,122,889 ரூபா பணம் இன்னும் செலுத்தப்படவில்லை என 2018 மே மாதம் 31 ஆம் திகதி CEB சட்ட அதிகாரி இடைக்கால நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உரிய தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், குறித்த தொகையை வசூலிக்க வழக்கு தொடரப்படும் என சட்ட அதிகாரி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இன்று வரையில் அது தொடர்பான நிலுவைத் தொகை இலங்கை மின்சார சபைக்கு செலுத்தப்படவில்லை என ரஞ்சன் ஜெயலால் கூறுகிறார்.
No comments:
Post a Comment