Recent Posts

Search This Blog

Iகுரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக ‘லூப்'

Tuesday, 31 October 2023
குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுப்பதற்காக ‘லூப் கருத்தடை’ எனப்படும் கருப்பையக சாதனத்தை (IUD) அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவப் பிரிவும் பேராதனை போதனா வைத்தியசாலையும் இணைந்தே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் அறிவித்தார்.

IUD என்பது T-வடிவ பிளாஸ்டிக் துண்டு ஆகும், இது கர்ப்பத்தைத் தடுக்க கருப்பையில் வைக்கப்படுகிறது. பெண் குரங்குகளுக்குள் IUD ஐச் செருகுவதற்கான சாத்தியமான வழியைக் கண்டறிய ஒரு சோதனை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குரங்குகளின் கருப்பையின் அளவு மற்றும் கருப்பை வாயில் IUD களைச் செருகுவதற்கான பரிசோதனையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

“தற்போது பெண்களுக்குப் பயன் படுத்தப்படும் லூப் குரங்குகளுக்குப் பயன படுதத முடியாத அளவுக்குப் பெரிதாக உள்ளது.


எனவே , குரங்குகளுக்குள் ஐயுடியை ச் செருகுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறியக் கால்நடைத் துறை மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களைக் கொண்ட குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டம் வெற்றியடைந்தால், இனி அறுவை சிகிச்சைகள் இருக்காது, ஆனால் எங்களுக்குத் தேவையானது அவர்களுக்கு

மயக்க மருந்து கொடுப்பது மட்டுமே. IUD யை நிறுவிய பின், விந்தணுக்கள் கருப்பையை அடைவதைத் தடுக்கிறது மற்றும் குரங்குகள் கருத்தரிப்பதைத் தடுக்கிறது,


குரங்குகளுக்கு ஏற்ற IUD களை தயாரிப்பதற்காகக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலவிடப்படும்.

IUD தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

"மக்கள் குரங்குகளைப் பிடித்து சில இடங்களில் விடுவார்கள். IUDகள் பரவலாகக் கிடைத்தால், மக்கள் தாங்களாகவே குரங்குகளுக்குள் அவற்றைச் செலுத்தி அவற்றின் தொகையைக் கட்டுப்படுத்த உதவலாம்," என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment