Recent Posts

Search This Blog

எதிர்பார்த்த நல்ல பதில் கிடைக்காததால் அரச தாதியர் சங்கம் இன்றும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில்..

Tuesday, 16 January 2024


அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சருக்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்பார்த்த நல்ல பதில் கிடைக்காத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்தார்.

இதேவேளை, பல சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (17) காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஒன்றிய முன்னணி தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் மீண்டும் தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.


No comments:

Post a Comment