நாட்டின் அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 28 ஆம் திகதியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் மழைக்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளன என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை இன்றைய தினம்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்
****************************
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹமபாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி
No comments:
Post a Comment