Recent Posts

Search This Blog

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு செமி பைனல் விளையாட இன்னும் வாய்ப்பு உள்ளதா?

Monday, 30 October 2023


நடைபெறும் icc கிரிக்கெட் உலகக் கோப்பையில் புள்ளி அட்டவனையில் முதலில் இருந்தாலும், இறுதியில் இருந்தாலும் semi final விளையாடும் நாக் அவுட் சுற்றில் இடம் பெறுவதற்கான அமைப்பு இன்னும் எந்த அணிக்கும் தீர்மானிக்க படவில்லை .

இதுவரை எந்த அணியும் கணித ரீதியாக வெளியேற்றப்படவில்லை -


தற்போது இறுதி இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து கூட semi final விளையாடும் வாய்ப்பை முற்று முழுதாக இன்னும் இழந்து விடவில்லை.


இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் 6 போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.


இலங்கைக்கு இன்னும் தகுதி வாய்ப்பு உள்ளதா?


ஆறு ஆட்டங்கள் விளையாடி நான்கு புள்ளிகளை பெற்ற அணிகளாக இலங்கை பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து உள்ளன.


புள்ளி நிலைமை நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் முழுமையாக அதிலிருந்து வெளியேறவில்லை.


கணித ரீதியாக பார்த்தால் , இரண்டு அணிகள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறுவது  சாத்தியமாகும்,
அதே வேளை மேலும் ஏழு அணிகள் எட்டு புள்ளிகளில் முடிவடையும்,
என ESPN Cricinfo தெரிவித்துள்ளது.

அதன் படி
எதிர் வரும் 3 போட்டிகளையும் இலங்கை அணி வென்றால் 10 புள்ளிகளுடன் முதல் ரவுண்டை முடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.


இலங்கை மட்டுமன்றி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து போன்ற மூன்று நாடுகளும் இந்த நிலையில் உள்ளது.

இந்த அணிகளில் ஒன்று அல்லது இரண்டு அணிகள் அவ்வாறு 10 புள்ளிகளை பெற்றால் ஏற்கனவே 12 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று semi final விளையாட தகுதி பெற்ற இரு அணியுடன் இவை நாக் அவுட் ரவுண்ட் விளையாடும் சந்தர்ப்பத்தை பெறலாம்.


இருப்பினும், இவர்கள் இதுவரை மோசமாக விளையாடியுள்ளதுடன் 6 போட்டிகளில் 2 மட்டுமே வென்றுள்ளனர்.

மேலும் இவர்களின் மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக இருப்பதால், இவர்கள் புள்ளி பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

இலங்கை அணி - Still to play:
India (2 November), Bangladesh (6 November),
New Zealand (9 November)

பாகிஸ்தான் அணி to play
Vs பங்களாதேஷ் ( இன்று )
Vs Newzeland ( 4 Nov)
Vs England (11 Nov )




No comments:

Post a Comment