வடக்கு ஈராக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 150 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட அணர்த்ததில் மணமகன் மற்றும் மணமகள் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது ஆனால் அது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழும்
Nineveh மாகாணத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் வானவேடிக்கைகள் மற்றும் பட்டாசு கொளுத்திய போதே தீ அனர்த்தும் ஏற்பட்டதாகவும் திருமணம் இடம் பெற்ற கட்டிடம் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் இலகுவாக தீப்பறவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment