Recent Posts

Search This Blog

மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து ரஷ்ய நாட்டவர் மற்றும் இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு.

Saturday, 29 July 2023


கண்டி, மீமுரே - ஹுன்னஸ்கிரிய வீதியில் புஸ்ஸேஎல பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும் இலங்கைப் பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர்.


இதன்போது, காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், இலங்கை பெண் 51 வயதுடையவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்


No comments:

Post a Comment