கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தப்பளை நகரில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, நுவரெலியா பகுதியிலிருந்து கந்தப்பளை நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment