
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை புனர்வாழ்வு அளிக்காமல் விடுதலை செய்யக்கூடாது என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்தார்.
அவர் எழுதிய ஶ்ரீ லங்காஸ் ஈஸ்டர் சண்டே மெஸ்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..
அரசாங்கக்தை கவிழ்க்கவே சஹ்ரான் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக எவருக்கும் கூறமுடியாது.அதற்கு பின்னால் மத அடிப்படைவாதம் இருந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை புனர்வாழ்வு அளிக்காமல் விடுதலை செய்யதால் அவர்களினால் மீண்டும் அந்த அடிப்படைவாதம் பரப்பப்படலாம்.நான்கு வருடங்கள் கழிந்து இதுவரை புனர்வாழ்வு அளிக்க கடந்த இரண்டு அரசினாலும் முடியாமல் போயுள்ளது.புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தை ஆரம்பிக்காவிட்டால் இன்னுமொரு தாக்குதல் நடக்கலாம்.இந்த செய்தியை நான் உங்களுக்கு கூறவே விரும்புகிறேன்.
தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட இல்ஹாம் மற்றும் இன்ஷாப் ஆகியோரின் தந்தை இப்ராஹிம் பன்சலைகளுக்கு உதவி செய்தவர் ஆனால் அவரின் பிள்ளைகள் அவ்வாறில்லை அவர்கள் மத அடிப்படை வாதத்தினால் மூளை சலவை செய்யப்பட்டிருந்தார்கள்.
முஸ்லிம் பள்ளிகள் மற்றும் மத்தரஸாக்களில் மத அடிப்படைவாதம் கன்காணிக்கப்பட வேண்டும்.வெளிநாட்டு மத போதகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட கூடாது.
சஹ்ரான் மற்றும் நவ்பரை தீவிர மத அடிப்படைவாதிகளாக மாற்றியது இந்தியாவில் இருந்து வந்த பீஜே.சஹ்ரான் பீஜே போன்று போதனை நடத்த முயற்சித்தார்.இன்னும் 10 அல்லத் வருடங்களில் சஹ்ரான் நடத்தியது போன்ற இன்னும் ஒரு தாக்குதல் நிகழ வேண்டும் என நீங்கள் விரும்பினால் வெளிநாட்டு மத போதகர்களுக்கு நாட்டிற்கு வர அனுமதிக்கவும் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment