அரசு மருத்துவமனைகளின்
நடைமுறைகள் குறித்து
பொதுமக்கள் மத்தியில்
சந்தேகம் எழுந்துள்ளதாகவும்,
நம்பகத்தன்மை குறித்த கேள்வி
எழுந்துள்ளதாக தெரிவித்த
பீரிஸ், வைத்தியசாலைகளில்
மருந்து தட்டுப்பாடு காரணமாக
நோயாளர்களின் உயிருக்கு
ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார.
மருத்துவர்கள் நாட்டை
விட்டு வெளியேறுவதால்
வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதை கணக்காய்வாளர்
அறிக்கைகள் தெளிவாக
வெளிப்படுத்துகின்றன என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
இலவச சுகாதாரம் என்பது
தற்போது அவப்பெயர் பெற்றுள்ளது
என்று தெரிவித்துள்ள அவர்,
ஸ்தம்பிதமடைந்துள்ள தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்ற
அனைவரும் அணிதிரள
வேண்டுமென கோரிக்கை
விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் தரிந்து
உடுவரகெதர கைது செய்யப்பட்ட
விதம் அருவருப்பானது எனவும், ‘அஸ்வசும' என்பது அரசாங்கத்தின்
புரளி எனவும், வெளிப்படைத்தன்மை
இல்லாத வேலைத்திட்டம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார.
No comments:
Post a Comment