நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியையாக கடமையாற்றி வந்த திருமதி. ஜெமீலா இஸ்மாலெவ்வை (SLTS-1) தனது 60 வயதினைப் பூர்த்தி செய்ததன் காரணமாக ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் தனது முதல் நியமனத்தை 1992.06.25ம் திகதி ஆசிரியையாக சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கடமையேற்று அப்பாடசாலையில் 2001.05.14ம் திகதி வரை சுமார் 9 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் 2001.05.15ம் திகதி கமு/கமு/சாய்ந்தமரு மல்ஹருல் ஸம்ஸ் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று 2009.05.31 வரை சுமார் 8 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
அதன் பின்னர் கமு/கமு/சாய்ந்தமரு அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு 2009.06.01ம் திகதி இடமாற்றம் பெற்று 2018.03.01ம் திகதி வரை சுமார் 09 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். அதன் பின்னர் மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 2018.03.02 ம் திகதி இடமாற்றம் பெற்று 2023/07/23 ம் திகதி வரை சுமார் 5 வருடங்கள் தனது அர்ப்ணிப்பான சேவையினை செய்துள்ளது மட்டுமன்றி இப்பாடசாலையில் கடமையாற்றிய காலத்தில் தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலையின் கணணி ஆய்வுகூட அபிவிருத்தி, மற்றும் வசதி குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் போன்ற சமூக சேவை விடயங்களிலும் அதிக பங்களிப்பு செய்துள்ள இவ் ஆசிரியையின் சேவையினை பாடசாலை சமூகம் நன்றியுடன் நினைவுகூர்ந்து வாழ்த்துக்களையும் தெரிவித்து பாராட்டி பிரியாவிடை வழங்கியுள்ளது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
No comments:
Post a Comment