Recent Posts

Search This Blog

புகையிலையை சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்.

Monday, 31 July 2023


 நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஏனைய போதைப்பொருட்களுடன் ஒப்பிடும் போது, ​​அதன் பரவல் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பாடசாலை அமைப்பில் புகையிலை பாவனையின் போக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை அமைப்பில் நாம் அடிக்கடி புகையிலை பாவனையை பார்க்கிறோம். வீட்டிலேயே புகையிலையைச் செய்து சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் பழக்கம் மாணவர்கள் இடையே காணப்படுகின்றது. புகையிலையால் ஏற்படும் போதைக்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment