18 வயதான இளைஞனின் ஆடையை கழற்றி, அவனை முழுமையாக நிர்வாணமாக்கி, அவர் அணிந்திருந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மாலை அபகரிக்கப்பட்ட சம்பவமொன்று புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புளத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், மாலை நேர தனியார் வகுப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவதற்காக பஸ் தரிப்பிடத்தில் சனிக்கிழமை (29) பஸ்ஸூக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர், தான் பொலிஸ் அதிகாரி எனவும், விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அவ்விளைஞனை ஏற்றியுள்ளார்.
அவர், மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு செலுத்தாது இறப்பர் தோட்டத்துக்கு செலுத்தியுள்ளார். அங்கு வைத்து இளைஞனை அச்சுறுத்தி ஆடைகளை கழற்றி, கைகளை கட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞன் தனக்கு நேர்ந்ததை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்ததன் பின்னர், பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புளத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment