Recent Posts

Search This Blog

13 ஐ நீக்கி 22 ஆவது அறிமுகமா நாடு படு மோசமான நிலைக்குத் தள்ளப்படும்

Thursday, 27 July 2023


நாட்டில் நடைமுறையிலுள்ளதாகச் சொல்லப்படுகின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கி, அரசியல் யாப்பில் 22ஆவது திருத்தத்தை மாற்றமாக கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய


கம்மன்பில கூறிய கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு, அவரது கருத்தை எதிர்ப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


மன்னார் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


நாட்டில் நடைமுறையிலுள்ளதாகச் சொல்லப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை முற்று முழுதாக நீக்கி, அரசியல் யாப்பில் 22ஆவது திருத்தத்தை புதிய சட்டமாக கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியிருக்கிறார்.


இவ்வாறான ஒரு எண்ணப்பாட்டுக்கு அவர்கள் வருவார்களாக இருந்தால், முற்று முழுதாக இலங்கையை படு பாதாளத்துக்கு தள்ளும் ஒரு நிலமையையே ஏற்படுத்தும். இயக்கர்கள், நாகர்களாக இலங்கையினுடைய தேசிய இனமாக, பூர்வீக குடிகளாக தமிழர்கள் இருக்கிறார்கள்.


அவர்களுக்கு உரித்து இருக்கிறது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற மக்களுடைய எண்ணக் கருக்களுக்கு அமைவாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாகவோ, கருத்துக் கணிப்பு ஊடாகவும் அவர்கள் விரும்புகிற ஆட்சி முறையில் இருக்கும் உரித்து அவர்களுக்கு இருக்கிறது. 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக கொண்டு வரப்பட்டது. ஆனால், அது கூட முற்று முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.


தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வருவது தமிழர்களுக்கு தீர்வாக அமையாது.


ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் வீண் கருத்தை வன்மையாக கண்டிப்பதுடன், அவரது கருத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



No comments:

Post a Comment