Recent Posts

Search This Blog

UNP யுடன் இணைந்து செயற்பட எண்ணும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் SJB யில் உள்ளனர்.

Monday, 29 May 2023


ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட எண்ணும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர்களை தூண்டில் போட்டு இழுக்கும் முறையை தவிர்த்து கலந்துரையாடல் மூலம் ஒரு ஒருமைப்பாட்டுக்கு வர முயற்சி செய்வதால் சிறந்த பலனை அடைய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.


கண்டி, குண்டசாலை, கலாபுரவுக்கு விஜயமொன்றை கடந்த 27ஆம் திகதி மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நாடு வீழ்ந்துள்ள நிலைமையை கருத்தில் கொள்ளும்போது அதிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஒன்றாக நடவடிக்கையில் ஈடுபடும் பொறுப்பு பொதுமக்களின் பிரதிநிதிகளான அனைவருக்கும் உள்ளதெனவும் அவர் தெரிவித்தார். 


சட்டவிரோதமாக தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சம்பவம் தொடர்பாக அந்த உறுப்பினர் தொடர்பில் நாடு உணரக்கூடிய விதத்தில் ஒழுங்கு நடவடிக்கையை பாராளுமன்றத்தின் மூலம் எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டும் என்றும் புதிய ஊழல், மோசடி ஒழிப்பு சட்டத்தை விரைவாக செயல்படுத்தும் தேவை தற்போது தெளிவாக தெரிவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்



No comments:

Post a Comment