Recent Posts

Search This Blog

இன முறுகல்களை தூண்டுபவர்கள், இனவாத பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் ; பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

Tuesday, 30 May 2023


இனவாத பிரச்சினைகளைத் தூண்டுவதற்கு அல்லது அதை ஒத்த நோக்கங்களுடன் செயல்பட முயற்சிக்கும் நபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தத் தயங்கமாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்தார்.


குறிப்பாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கான பாதையில் செல்லும் முக்கியமான தருணத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டில் இன மதப் பூசல்களைத் தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கும் நோக்கத்தில் உள்ள பல்வேறு கூறுபாடுகள் குறித்தும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவலை தெரிவித்தார்.

ஆரோக்கியமான சமூகத்திற்கு மத ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் மேலும் வலியுறுத்தினார்.

"ஒரு நபர் அல்லது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கு அல்லது அதே நோக்கத்துடன் வேலை செய்ய முயற்சித்தால், அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 9வது அத்தியாயத்தின்படி சட்டத்தை கடுமையாக அமல்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம்," என்று அவர் மேலும் கூறினார்.


No comments:

Post a Comment