இந்த முறை க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் தோற்றும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் மற்றும் அவர்களின் பெற்றார்களுக்கும் அன்பார்ந்த ஒரு வேண்டுகோள்.
பரிட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபணத்தின் பிரகாரம் பரீட்சை மண்டபத்தில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து சட்ட திட்டங்களையும் முறையாக கடைபிடித்து பரீட்சைக்கு முகம் கொடுக்குமாறு மிகப் பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
அந்த சட்ட திட்டங்களுள் ஒன்றான தனது அடையாள அட்டையில் இருக்கும் வகையில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் என்ற கூற்றின் அடிப்படையில் ஃபர்தா அணியக்கூடிய மாணவிகள் கட்டாயமாக உங்கள் இரு காதுகள் உட்பட உங்களது முழுமையான முகம் தெரியும் அமைப்பில் உங்கள் ஆடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாய கடமையாகும்.
ஃபர்தா அணியக்கூடிய மாணவிகள் இரு காதுகளையும் வெளிப்படுத்தக் கூடிய அமைப்பில் ஃபர்தா அணிவது சாத்தியம் இல்லாத விடயம் என்றால் தயவு செய்து நீங்கள் அணிந்திருக்கும் ஃபர்தாக்கு பதிலாக பரீட்சை எழுதும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் முந்தானையை மாற்றி அணிந்து கொள்ள முடியும்.
இதற்கு மேலாக பரீட்சை பொறுப்பதிகாரியுடன் கதைத்து பரீட்சை மண்டபத்துக்கு புறம்பாக ஒரு வகுப்பறையை ஆடையை மாற்றி அணிந்து கொள்வதற்காக வேண்டி பெற்றுக்கொள்ளவும் முடியும்.
எந்த சட்டத்திலும் நீங்கள் அணியக்கூடிய பாடசாலை சீருடையில் ஏந்த மாற்றமும் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு இல்லை என்பதனை கருத்தில் கொள்ளவும். ஆனால் அடையாள அட்டையில் உங்கள் முகத்தின் தெளிவு எப்படி அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றதோ அதே அமைப்பில் முகத்தை மாத்திரம் காதுகள் உட்பட வெளி காட்டுவது மாத்திரமே சட்டமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில பரிச்சை மண்டபங்களில் பொறுப்பதிகாரிகள் மிகவும் புரிந்துணர்வுடன் முஸ்லிம் மாணவிகள் மண்டபத்திற்கு நுழையும் தருவாயில் பெண் அதிகாரி ஒருவரின் ஊடாக முழுமையாக பரிசோதனை செய்து பின்னர் பர்தாவை அணிந்து பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்குகின்றார்கள் இது சட்டத்துக்கு முரணாக இருந்தாலும் மனிதாபிமானம் அடிப்படையில் அவர்கள் பெருந்தன்மையுடன் இந்த மாணவிகளுக்கு ஒரு சலுகையையே பெற்றுக் கொடுக்கின்றனர் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.
எனவே தயவு செய்து இப்படி நல்லுள்ளம் படைத்த பெருந்தன்மையுடைய அதிகாரிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் எமது நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாது சட்டத்தை விளங்கி சட்டத்துக்கு மதிப்பளித்து வீணான மன உளைச்சலுக்கு உட்படாது தன்னம்பிக்கையுடன் தைரியமாக பரீட்சையை சிறப்பாக எழுதுமாறு மிகவும் பணிவுடன் எமது மாணவிகளை வேண்டிக் கொள்கின்றேன்.
முதல் தடவையாக முஸ்லிம் மாணவர்கள் சமூகம் அளிக்கும் பரீட்சை மண்டபத்தில் பரீட்சை மேற்பார்வையாளராகவோ பொறுப்பதிகாரிகளாகவோ கடமையில் அமர்த்தப்பட்டு இருப்பவர்கள் இந்த சுற்று அறிக்கையை பிழையாக விளங்கிக் கொண்டு பர்தா முந்தானை இரண்டையும் முழுமையாக தவிர்க்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்ததை நேற்றைய தினம் மாகாணப் பணிப்பகம் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி வளையம் ஆகியவையின் தலையீட்டின் ஊடாக பொறுப்பதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் போதிய தெளிவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை சம்பந்தமாக மத்திய மாகாண சபை பிரதான செயலாளர் மற்றும் மத்திய மாகாண கல்வி படணிப்பகம் இரண்டு தரப்புகளுடனும் உடனடியாக கலந்தாலோசித்தன் அடிப்படையில் அனைத்து பரிட்சை மண்டபங்களுக்கும் போதிய தெளிவுகள் வழங்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் பின்னரும் கண்டி மாவட்டத்தில் எங்கேயாவது பலாத்காரமாக உங்களது பர்தாவையோ முந்தானையையோ கழட்டி வைத்துவிட்டு பரிட்சை மண்டபத்துக்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுமாயின் தயவுசெய்து மனம் தளர்ந்து விடாது பரீட்சையை முதலில் எழுதிவிட்டு பின்னர் உங்கள் பெற்றோர்களின் ஊடாக உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
தொ. இல : 0771910560
நன்றி
வசீர் முக்தார் - 🇱🇰
No comments:
Post a Comment