Recent Posts

Search This Blog

இனமுறுகளை, இனப் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் முயற்சி செய்கின்றன... இதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

Tuesday, 30 May 2023


சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இனப்பதற்றத்தை பரப்புவதற்கு பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புச் சபைக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன, செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.


2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இருந்து அரசாங்கம் பாடம் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட அவர், பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை
அரசாங்கம் எடுக்கும் என்றார்.



இலங்கையில் நிராயுதபாணிகளான
அப்பாவி மக்களுக்கு இடையூறு
விளைவிக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும்
அல்லது சம்பவத்திற்கும் அரசாங்கம்
இடமளிக்காது என்றும் அமைச்சர்
குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment