ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில், தற்போது பல முட்டாள்களே இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து தமக்கு தெரியாது.
எனினும், வெறுமனே அரசாங்கத்தில் அமர தாம் தயாரில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியுடனோ அல்லது அவரின் பெரும்பான்மை அரசாங்கத்துடனோ தமக்கு பிரச்சினை இலலையென்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்பவும், தேர்தல் வெற்றியை பெற்றுக்கொடுக்கவும் ஐந்து வருடங்களாக அயராது உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment