Recent Posts

Search This Blog

VIDEO : தாமரை கோபுரத்தில் தம் பெயர்களை எழுதிய இளம் ஜோடி கைது.

Tuesday, 30 May 2023


 கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் ஜோடி  கோபுரத்தின் சுவரில் எழுதும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று (30) மாலை அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான செயற்பாடுகளால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment