தெஹிவளையில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் கல்கிசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கல்கிசை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment