பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தம்மைத் தாக்கியவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொலொன்னேவின் மகனும் உள்ளடங்குவதாக குறித்த மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில்,
என்னை அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்கள் தனக்கு வழங்கிய தொலைபேசி அழைப்பையும் பதிவு செய்துள்ளார். பின்னர் வந்தவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அடித்து, வீட்டுக்கு அருகில் விட்டுச் சென்றனர்.
இவர்களில் நாலக கொலொன்னேயின் மகன் தினாத் விஜேசிங்க என்ற நெலுஷா கொலொன்னே இருந்தார், ஏனையவர்களின் பெயர்கள் எனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமான நாலக கொலொன்ன, சிசிடிவி காட்சிகளில் தனது மகன் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்கும் தனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment