ஹஸ்பர்_
பெண்கள் அரசியலில் மதிக்கப்பட வேண்டும் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் மூலம் திருகோணமலையில் (26) இடம் பெற்ற டிஜிடல் அறிவை மேம்படுத்தல் தொடர்பில் இடம் பெற்ற செயலமர்வின் பின் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அதில் கலந்து கொண்ட சிவில் சமூக பெண் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஜனனி திட்டம் ஊடாக நடை முறைப்படுத்தப்பட்ட குறித்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய சிவில் சமூக பெண் பிரதிநிதிகள்
இணையத்தளங்கள் ஊடாக பெண்களுக்கு துஷ்பிரயோகங்கள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் போன்றன இடம் பெறுகிறது இவ்வாறானவற்றை கடுமையான சட்டங்கள் மூலம் அதற்கான தண்டனைகளை வழங்கி பெண் உரிமைகளை பாதுகாக்க அரசியலில் சரி எதுவாயினும் சரி பாதுகாக்கப்பட வேண்டும் .கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது பெண்களுக்காக 25 வீதமான ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் வெறும் கண்துடைப்புக்காக ஓரிரு பெண்களே அதில் உள்வாங்கப்பட்டனர் இந்த நிலை மாறி எந்த பதவிகளாக இருந்தாலும் பெண்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல்களாயினும் சரி அரசியலில் பெண்களும் முறையாக உள்வாங்கப்பட வேண்டும் அப்போது தான் எமது உரிமைகள் பாதுகாக்கப்படும் என கூட்டாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment