ஏழை வீட்டிலும் பெருநாள் சகன் சாப்பாடு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.
இருவரின் முன் மாதிரியான வேலைத்திட்டம்
ஊரைக் கடந்தும் வெளியூர்களிலும் இவர்களின் இத் திட்டம் நடைபெற்றது.
அல் ஹம்துலில்லாஹ்
காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர் எம்.எஸ்.எம்.நுசைர், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்
எம்.பி.எம்.பைறூஸ்
ஆகிய இருவரும் இணைந்து ஏழை வீட்டிலும் பெருநாள் எனும் தொனிப்பொருளில் நாம் ஆரம்பித்த பெரு நாள் சகன் சாப்பாடு வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நேற்று பெருநான் தினத்தன்று முன்னெடுக்கப்பட்டது.
இவர்கள் இத்திட்டத்தை 3வது முறையாக செய்துள்ளார்கள்.
ஆனால் இம்முறை மிகப் பாரிய அளவில் இதனை செய்து முடித்திருக்கின்றார்கள்
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்களுக்கு பெருநாள் தினத்தன்று சிறந்த பகல் உணவை வழங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நமது சகோதரர்களின் ஆர்வமிக்க நிதிப் பங்களிப்பின் காரணமாக ஏராளமான ஏழைகளுக்கு உதவ முடிந்துள்ளது.
இதற்காக மிகப்பொருத்தமான வறிய குடும்பங்கள் இனங்கானப்பட்டு அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உணவு விநியோகத்தை செய்துள்ளார்கள்.
என்னிடமும் சில குடும்பங்களை தெரிவு செய்து கேட்டார்கள்.
நானும் சில குடும்பங்களை அடையாளப்படுத்திக் கொடுத்தேன்.
எந்த நிரந்தர வருமானமும் இல்லாத குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், சுகவீனத்தல் தொழில் இழந்த குடும்பங்கள், அதிக பிள்ளைகள் உள்ள குடுங்களையே இவர்கள் தெரிவு செய்திருந்தனர்.
இம்முறை காத்தான்குடியில் மாத்திரமன்றி ஏனைய சில பகுதிகளுக்கும் இவர்களால் இத்திட்டத்தை விஸ்தரிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பின்வரும் அடிப்படையில் சஹன்கள் விநியோகிக்கப்பட்டன.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகள் - 140
கிண்ணியா - 10
கண்டி, தெல்தோட்டை - 10
பாணந்துறை - 7
கொழும்பு - 6
திஹாரி - 5
அட்டாளைச்சேனை - 2
இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர் எம்.எஸ்.எம்.நுசைர், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் ஆகிய இருவருக்கும் இவர்களோடு உழைத்த ஏனைய சகோதரர்களுக்கும் இதற்காக உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் எனது சார்பிலும் மிகையான நன்றிகள்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
23.04.2023
No comments:
Post a Comment