Recent Posts

Search This Blog

இருவர் கைது செய்யப்பட்டதற்காக குழு ஒன்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பதற்றம்.

Monday, 26 December 2022


சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப் பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் என கூறிக்கொள்ளும் குழுவினர் அங்குலான பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் ​பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த உறவினர்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இவ்வாறு தப்பிச் சென்ற குறித்த இரு சந்தேகநபர்களும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோன்டியா மற்றும் கலயா என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைத்தொலைபேசி தொடர்பில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து அதனை சமரசம் செய்து கொள்வதற்காக அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்போது அங்குலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்ததாகவும், பின்னர் அவர்களது உறவினர்கள் குழுவொன்று வந்து சந்தேக நபர்களை அழைத்துச் செல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்போது ​​அங்கு பதற்றமான சூழல் உருவானதுடன், நிலைமையை கட்டுப்படுத்த முற்பட்ட போது அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அவர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பதற்றமான நிலைமையைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்


No comments:

Post a Comment