Recent Posts

Search This Blog

Update : தென் கொரிய சோகம்... Halloween கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 155 ஆனது.

Saturday, 29 October 2022


தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 155 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர், முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காயமடைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 140 வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது.



No comments:

Post a Comment