Recent Posts

Search This Blog

கல்விக்காக ​சென்ற இளைஞரே தென் கொரிய நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்

Sunday, 30 October 2022


தென்கொரியாவின் சியோல் தலைநகர் Itaewon இல் இடம்பெற்ற “Hallloween” திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த இளைஞர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றவர் அல்ல எனவும், கல்விக்காக வெளிநாடு சென்றவர் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வெளிநாட்டுத் தொடர்புப் பிரிவினர் உடனடியாக தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக உரிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகத்திலிருந்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, உயிரிழந்தவர் அகதி வீசாவில் நாட்டில் தங்கியிருந்தவர் எனவும், பாதிக்கப் பட்டவர்களில் மேற்கூறிய நபரைத் தவிர வேறு எவரும் இலங்கையர்கள் இருப்பதாக இதுவரை தகவல்கள் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment