
மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிக்குகள் தொடர்பில் நாயக்க தேரர்களுக்கு தெரியப்படுத்தவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதுடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் புதிய பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பிக்குகள் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்ட பொலிஸாரின் ஊடாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதுடன் ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாயக்க தேரர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த பிரச்சினையை கையாள்வதற்காக தனியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரங்கள் கொண்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment