யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
24 வயதான இவர்கள் இருவரும் நேற்று (24) திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நண்பர்கள் இணைந்து தோட்டக் காணி ஒன்றில் மதுபானம் அருந்தியுள்ளதாகவும், இவர்கள் வீடு திரும்பும் வழியில் தோட்டக் கிணறொன்றில் ஒருவர் தவறி வீழ்ந்துள்ளதாகவும் அவரை காப்பாற்றுவதற்காக அவரின் நண்பரும் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments:
Post a Comment