Recent Posts

Search This Blog

டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதா? அம்பலமானது முக்கிய ஆவணங்கள்.

Friday, 28 October 2022


சமீபத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு வர முடியாது என புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்டு அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த நாட்களில், அரசியல் அரங்கில் எங்கும் பேசப்படும் தலைப்பு, இப்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதுதான். அதில், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பெயரும் உள்ளடங்குகிறது.

எனினும், தனக்கு இரட்டைக் குடியுரிமை இல்லையென நேற்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இருந்த போதிலும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று அறிவித்தல் விடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இரட்டைக் குடியுரிமை விடயத்தை விசாரிக்கத் தவறியதன் காரணமாக, லக்மால் ஹேரத் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் போலியானது என அரச அதிகாரிகள் சாட்சியமளிக்கும் போது அது தொடர்பில் விசாரணை செய்யாமை பாரிய கடமை தவறிழைப்பதாக அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.




No comments:

Post a Comment