கொழும்பு – புறக்கோட்டை சந்தை நிலவரத்தின் பிரகாரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
திறந்த வங்கி கணக்கு ஊடாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ அனுமதி வழங்கியதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அறிய முடிகின்றது
No comments:
Post a Comment