அநுராதபுரம்-கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று குறித்த பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளது.
அந்த இடத்தில் திரண்ட பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து போராட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட போது பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் காயமடைந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்த்ககது.
சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment