Recent Posts

Search This Blog

13 பால்மா பொதிகளை (15000 பொறுமதியான) திருடிய வெளிநாட்டவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை

Monday, 31 October 2022


13 பால்மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை


பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 13 பால்மா பொதிகளை திருடிய வெளிநாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன், அவருக்கு 1500 ரூபா அபராதம் விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.


கொழும்பில் உள்ள தனியார் வர்த்தக வளாகத்தில் பால் மா பொதிகளை திருடிய குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சிய பிரஜையான குறித்த சந்தேகநபர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிவான் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.




No comments:

Post a Comment